ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் !.....
உலகம் முழுவதும் பரவலாக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேர்டு, எக்ஸல் மற்றும் பவர்பாயிண்டு புரோகிராம்கள் அடங்கிய மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளை விரைவில் கூகுளின் ஆன்ட்ராய்டு ஸ்டார்ட்போன்களிலும் அறிமுகமாக உள்ளது. அனைத்து விதமான கருவிகளிலும் தனது ஆபிஸ் மென்பொருளை கிடைக்கச் செய்யும் பொருட்டு மைக்ரோசாப்ட் இந்த புதிய யுக்தியை கையாளுகிறது.ஆப்பிள் ஐபேட் கருவிகளுக்கு முதல்முறையாக தொடுதிரைக்கு ஏற்ற வகையிலான ஆபிஸ் மென்பொருளை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் அதன்பிறகு, படிப்படியாக ஆன்ட்ராய்டுக்கு ஏற்ற வகையிலான ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆன்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் வரையிலான ஏ.ஆர்.எம். டேப்லட்டுகளில் ஆபிஸ் மென்பொருள் வசதிகளை வழங்க முயற்சித்து வரும் மைக்ரோசாப்ட் தற்போது கூகுளின் லேட்டஸ்ட் பதிப்பான லாலிபப்பிலும் கொண்டு வர தயாராகி வருகிறது. ஏற்கனவே, டெல் வென்யூ 8 மற்றும் இண்டல் பிராசஸர்களை கொண்ட ஆன்ட்ராய்டு டேப்லட்டுகளில் ஆப்ஸ்களை வெளியிட்டுள்ள மைக்ரோசாப்பட் ஆன்ட்ராய்டு மொபைல்களில் இதுவரை எந்த ஆப்ஸ்களையும் கொண்டு வரவில்லை.
இந்நிலையில், விரைவில் ஏர்.ஆர்.எம். மற்றும் இன்டெல் பிராஸசர்களை கொண்ட அனைத்துவித ஆன்ட்ராய்டு மொபைல்களிலும் ஆபிஸ் மென்பொருள் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.