இதய நோய் ,காசநோய் மற்றும் தாய்மை அடையச் செய்யும் கண்டங்கத்திரி
கண்டங்கத்திரி (கண்டகாரி)
தன்மை
இது கத்திரிப் பூ போன்ற மலர்களைக் கொண்டிருக்கும்.வெள்ளைப் பூ பூக்கும் செடியும் உண்டு.மலத்தை வெளித்தள்ளும்.கசப்பு மற்றும் கார்ப்புச் சுவை கொண்டது.பசியை தூண்டக் கூடியது.செரிமான பலத்தை பாதுகாக்கும்.இவ்விரண்டின் காய்கள் கார்ப்புச் சுவை கொண்டவை.விந்துவை வெளியேற்றும்.பேதியாகச் செய்யும். பித்தத்தையும் சூட்டையும் வளர்க்கும்.இதன் வேர், காய், மலர் என்பன மருந்தாகப் பயன்படும்.
தீர்க்கும் நோய்கள்
இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாள்பட்ட சளி, விலாவலி, கிருமிநோய் மற்றும் இதய நோய் குணமாகும்.இவற்றின் கைகள் கபம், வாதம், வலி, அரிப்பு, கெட்ட கொழுப்பு(LDL) முதலியவற்றை அகற்றும்.முக்கியமாக வெள்ளைப்பூ பூக்கும் கண்டங்கத்திரி சிறப்பாக கருவுறச் செய்யும்.