வாழ்கையில் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதிற்கு இவர் ஒரு முன் உதாரணம் ...
வாழ்கையில் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதிற்கு இவர் ஒரு முன் உதாரணம் .....
அமெரிக்காவில் உள்ள சன் -டியாகோ என்ற நகரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 92 வயதான மூதாட்டி பந்தயத்தின் முழு தூரத்தையும் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை அமெரிக்காவை சேர்ந்த ஹரேயிட்டி தாம்சன் என்ற பெண்மணி நிகழ்த்தியுள்ளார்
இவர் பந்தய தூரத்தை 7 மணி நேரம் 24 நிமிடங்கள் 36 நொடிகள் எடுத்து கொண்டார் . அதுமட்டுமின்றி இவர் ஒரு புற்று நோயாளி என்பது கூறிபிடதக்கது
இந்த சாதனை குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு வயதாகிவிட்டது என நான் ஒரு போதும் நினைத்ததில்லை என்றும் நான் எப்பொழுதும் 16 வயது இளமையாகவே உள்ளேன் என்றும் கூறியுள்ளார் .மேலும் அவர் கூறியதாவது ,இது போல இன்னும் பல மாரத்தான் போட்டிகளில் பங்குபெறுவேன் என்று கூறியுள்ளார்