"மாரி" தனுஷ் புறா ரேஸர்
வட சென்னை பகுதியில் குத்துச் சண்டை, பைக் ரேஸ், போட் ரேஸ், கேரம்போர்ட்டு, சேவல் சண்டை போன்றவை சூதாட்டமாக நடைபெறுகிறது. இதில் குத்துச் சண்டையை மையமாக வைத்து பூலோகம் படம் வெளிவருகிறது, சேவல் சண்டையை மையமாக வைத்து ஆரண்ய காண்டம் வெளிவந்தது, பைக் ரேஸை மையமாக வைத்து இரும்பு குதிரை வந்தது.
கேரம்போர்டை மையமாக வைத்து சுண்டாட்டம் வந்தது. அந்த வரிசையில் புறா ரேஸை மையமாக வைத்து மாரி வருகிறது. தனுஷ் இதில் புறாவை ரேஸ் விடுபவராக வருகிறார். அதில் வருகிற மோதலும், காதலும், கலாட்டாவுமாக இறங்கி அடிப்பதுதான் மாரி. ஆனால் "புறா ரேஸ் ஒரு சின்ன போர்ஷன்தான் கதை வேற டைப். தனுசை இறங்கி அடிக்கிற மாஸ் ஹீரோவாக காட்டுகிற கதை" என்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.
தனுசுடன் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார், பாடகர் விஜய் யேசுதாஸ் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரோபோ சங்கர் காமெடியன், சண்முகராஜன் வில்லன். மேஜிக் பிரேம் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஜூலை 17ந் தேதி படம் வெளிவருகிறது.