"சிம்புவின், கான் பர்ஸ்ட் லுக் வெளியானது"

 





சிம்பு நடித்து வரும் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியாகியுள்ளது. இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் படம். முதன்முறையாக சிம்பு - செல்வராகவன் இணைந்துள்ள இப்படத்தில், மெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரஸா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.கான் படத்தில் சிம்பு, முருக பக்தராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வௌியான நிலையில், இப்போது அதை மெய்பிக்கும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. ஆமாம் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணியளவில் வௌியிடப்பட்டது. அதில் சிம்பு பச்சை சட்டை அணிந்தபடி, நெற்றியில் விபூதி, பொட்டு எல்லாம் இட்டு, கையெடுத்து வணங்கியபடி ஒரு முருக பக்தர் போன்று காட்சியளிக்கிறார். சிம்புவின் பின்புறத்தில் கோவில் கோபுரம் ஒன்று இருக்கிறது. அத்துடன் கான் என்ற பட தலைப்புக்கு கீழ் காடும் காடு சார்ந்த பகுதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
சிம்பு - செல்வராகவன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படம் இது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக, சிம்புவை ஒரு புதிய கோணத்தில் பிரதிபலிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]