காவல்
கூலிப்படையை பற்றிய கதை 'காவல்'. டைரக்டர்கள் சீமான், சுசிகணேசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த வி.ஆர்.நாகேந்திரன், 'நீயெல்லாம் நல்லா வருவடா' என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். இப்போது, இந்த படத்தின் பெயரை, 'காவல்' என்று மாற்றியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
''இது, கூலிப்படையை பற்றிய படம். கொலை செய்யப்பட்டவர் எதற்காக கொலை செய்யப்பட்டோம் என்று தெரியாமலே இறந்து போகிறார்.
கொலையாளி, எதற்காக கொலை செய்தோம் என்று தெரியாமலே கொலை செய்கிறான். 20 வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு கொலையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
விமல், சமுத்திரக்கனி, கீதா , எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், சிங்கமுத்து, கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடித்துள்ளனர். புதுமுகம் தெய்வேந்திரன் வில்லனாக அறிமுகமாகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை நான் ஏற்றுள்ளேன்.
பெரும்பாலான படங்களில் காவல் துறையை கேலி-கிண்டல் செய்கிற நிலையில், இந்த படம் அதற்கு மாறுபட்டு, காவல் துறைக்கு கவுரவம் சேர்க்கும். ''மக்கள் பணியில் இன்னுயிர் நீத்த காவல் துறையினருக்கு சமர்ப்பணம்"
என்றுதான் படத்தை தொடங்கி இருக்கிறேன். படத்தை பார்த்த சில 'ஐ.பி.எஸ்' அதிகாரிகள், இந்த கதைக்கு, 'நீயெல்லாம் நல்லா வருவடா' என்ற தலைப்பு பொருத்தமாக இருக்காது. 'காவல்' என்று பெயர் சூட்டுங்கள் என்று யோசனைதெரிவித்தார்கள்.
தணிக்கை குழுவினர், ஒரு காட்சியை கூட நீக்காமல் படத்துக்கு,
'யு ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்."