ஆண்களின் மலட்டுத் தன்மை போக்கும்,நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் காட்டிலந்தை
காட்டிலந்தை(பதரீ(அ) வன்யா)
(Ziziphus Jujuba) Or (Indian Jujubi)
தன்மை
இலந்தை மரம் முட்களை பெற்றிருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மலத்தை வெளித்தள்ளும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். தேவையற்ற சுரப்பியின் சுரக்கும் தன்மையை வற்றச் செய்யும். இதன் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். சோர்வை நீக்கும். பித்தத்தை சமப்படுத்தும். சிறுநீரக பலம் கிடைக்கும். பேதியை நிறுத்தும்.இரத்த அழுத்தத்தை சமப்படுத்தும்.
தீர்க்கும் நோய்கள்
- நாவறட்சியை(Dehydration) போக்கும். இரத்த தோஷம் குணமாகும். எரிச்சல் குணமாகும். இலந்தை பசை மற்றும் பனைவெல்லம் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து குடிக்க, இரத்தப் போக்கை(Striptic) நிறுத்தும். BP சமப்படும். பேதி குணமாகும். (Sexual Tonic for Male) விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். (Nervine Tonic) நரம்பு மண்டலத்துக்கு பலம் தரும்.
- இலை, தேன் மற்றும் நீர் சேர்த்து நன்றாகக் கொதி வைத்து குடிக்க வேண்டும். இரத்தப்போக்கை நிறுத்தும். இலையை பசையாக்கி, தலையில் இட்டு குளித்து வர இளநரை குணமாகும். Amino Acids, Vitamins, Minerals, Fibre, Calcium சத்துக்கள் உள்ளன. இலந்தைப் பழத்தை மென்று தின்ன ஸ்கர்வி நோய் குணமாகும். பெண்களின் மாதவிலக்கு Menorrhagia எனும் நிலையில் இருந்து பாதுகாக்கும்.
- இலை பசையை தலைக்கு தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளிக்க, புழுவெட்டு (Alopecia Areata) குணமாகும்.ஆறாத புண்களையும் ஆற்றும். இது ஒரு அருமருந்து.