புலி விஜய் பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்கும் அஜித்தின் மைத்துனி ஷாமிலி






                                 ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி, ராஜநடை படம் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருது பெற்றவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

                                 ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபுவுக்கு தங்கையாக நடித்ததோடு பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்தார். கடைசியாக 2009ல் தெலுங்கில் வெளியான ஓய் படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்பு ஏதும் இல்லை. தற்போது 

                                  கே.எஸ் ரவிக்குமார் சுதீப்பை வைத்து இயக்கும் ஒரு படத்தில் சுதீப்புக்கு ஷாமிலியை கே.எஸ் ரவிகுமார் அணுகி உள்ளதாக  கூறப்பட்டுகிறது. ஆனால். இது குறித்து ஷாமிலி தரப்பில் எந்த  ஒப்புதலும் அளிக்கவில்லை. ஷாமிலியுடன் பேசி வருவதாகவும், ஆனால் இது குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

                                   இந்த படம் தமிழ் , தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரிக்கபடுகிறது. தற்போது சுதீப் விஜயுடன் புலி படத்தில் நடித்து வருகிறார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]