சிம்பு, தனுஷ் நேரடிப்போட்டி. பரபரக்கும் திரையுலகம்.

                                   
 

                                                                   நீண்டநாட்களாகப் போராடி சிம்புவின் படம் வெளியாகிவிடும் அறிகுறிகள் தென்படுகின்றன. வாலு படத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அதன்சிக்கல்களை ஒவ்வொன்றாகக் களைந்து வெளியீடு வரை டி.ராஜேந்தர் கொண்டுவந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

                                                                     ஜூலை 17 அன்று படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேதியை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்தத் தேதி என்றதும் மறுபடியும் திரையுலகில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அதே தேதியில்தான் கமலின் பாபநாசம், தனுஷின் மாரி, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

                                                                     இவற்றில் கமல் படம் மட்டும் இன்னும் தேதியை அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை. மற்ற இரண்டுபடங்களின் தேதிகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியானால் அந்தத் தேதியில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களோடு சிம்புவின் வாலு போட்டிபோடவிருக்கிறது. மூன்று நாயகர்களுமே வியாபாரமதிப்பு உள்ளவர்கள் என்பது மட்டுமின்றி அவர்கள் படங்களைத் தயாரித்திருப்பவர்களும் வலிமையானவர்கள் என்பதால் திரையரங்கு ஒப்பந்தம் செய்வதிலிருந்து விளம்பரம் செயவது வரை ஏகப்பட்ட போட்டிகள் இருக்கும் என்பது நிச்சயம்.

                                                                  அதிலும் சிம்பு படம் மற்றும் தனுஷ் படம் ஆகியன ஒரேநாளில் வருகின்றதென்றால் அவர்களுடைய ரசிகர்களுக்கிடையேயான அறிக்கைப் போர்களும் தொடங்கிவிடும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்களும் களமிறங்கினால் ஒரே வேடிக்கையாக இருக்கும் என்று திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url