மூல நோய்,பாம்புகடி,சுவாசக்கோளாறுகள் முதலிய எண்ணற்ற நோய்களை குணமாக்கும் கலப்பைக்கிழங்கு





கலப்பைக் கிழங்கு(லாங்கலீ)
(Gloriosa Superpa)

            இது Kalihari, Glory Lily, Flame lily என பல பெயர்களை பெற்றுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகையாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் நல்ல இலாபத்தைப் பெற்றுத் தரும். NABARD வங்கியிலிருந்து இந்த மூலிகைச் செடிக்கு 80-90% வரை Loan வழங்குகிறது.

தன்மை 

               இது 3.5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரும். மிகவும் கசப்புச் சுவை கொண்டது. உஷ்ண வீரியம் விரைவாக உடலில் பரவும்.கருச்சிதைவு ஏற்படுத்தும்.பித்தத்தை வளர்க்கும்.இது நெடி மற்றும் காரமான உள்ள கிழங்கு வகையைச் சார்ந்தது.

தீர்க்கும் நோய்கள் 

     ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் கிருமிகளை வெளித்தள்ளும். மலமிளக்கியாக பயன்படுகிறது. விஷத்தை முறிக்கும். குடற்புண்களை ஆற்றும். பருவநிலை மாற்றத்தால் வரும் தோல் நோய்களை குணமாக்கும். மூல நோய்க்கு நல்ல மருந்தாக பயன்படும்.

    அகட்டு வாய்வு அகற்றியாக செயல்பட்டு, வாயிற்று வாயுக்களை வெளியேற்றும். வீக்கம் மற்றும் புண்களை ஆற்றும். குட்டம் குணமாகும். அடிவயிற்று வலி குணமாகும். வாத,கப கோளாறுகள் நீங்கும்.இதன் வேர்கள் மற்றும் இலைகளானது பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படும். கால்நடைகளுக்கு இதன் இலைகளை புழுக்களை வெளியேற்றுவதற்காக கொடுப்பார்கள்.

     இதன் விதைகள் சந்தைப் பகுதிகளில் அதிக விலைக்கு போகும். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு விதைகளை பயன்படுத்துகிறார்கள். பல்வேறு தோல் நோய்களை போக்கும். பல்வேறு சுவாசக் கோளாறுகளை குணப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]