இரத்த பேதி,சீதபேதி மற்றும் விந்துவை பலப்படுத்தும் இலவம்
இலவம் (சால்மலி)
(Ceiba Pentandra)
தன்மை :
இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்டது.இரசாயனத் தன்மை கொண்டது.மியுசிலேஜ் எனும் எண்ணெய் பசை தன்மை கொண்டது.விந்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
தீர்க்கும் நோய்கள் :
பித்தம் மற்றும் வாதக் கோளாறுகளைப் போக்கும்.இரத்த ஒவ்வாமையை குணமாக்கும்.இரத்தில் உள்ள பித்தத் தன்மையை கட்டுப்படுத்தும்.இதன் பிசின் இரத்தபேதி,சீதபேதி,எரிச்சல்,அதிசாரம் மற்றும் கபபித்தங்களைப் போக்கும்.