சத்தான,உள் உறுப்புக்களை பலப்படுத்தும் சீரக சட்னி




தேவையான பொருள்கள் 

  •   சிவப்பு மிளகாய் ---  3
  •   சீரகம் ---  2 கரண்டி 
  •   பெரிய வெங்காயம் ---  3
  •   பூண்டு ---  4 பல்லு 
  •   புளி ---  நெல்லிக்காய் அளவு 
  •   வெல்லம்(விரும்பினால்) ---  சிறிய நெல்லிக்காய் அளவு 
  •   ந.எண்ணெய்  ---  2 ஸ்பூன் 
  •   பெருங்காயத் தூள் ---  1 சிட்டிகை 
  •   கறிவேப்பிலை ---  சிறிது 
  •   உப்பு ---  தேவைக்கேற்ப 

செய்முறை 

  • சீரகம். சிவப்பு மிளகாய், எண்ணெய் விடாது வறுக்கவும். பொடி செய்யவும்.


  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத் துண்டுகள், பூண்டு போட்டு வதக்கி எடுக்கவும்.

  • சூடான எண்ணெயில் (1 ஸ்பூன் அளவு ) கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, புளிக் கரைசலை விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும் . பச்சை வாசனை போனதும் வெங்காயத் துண்டுகள்,பூண்டு(வதக்கியது) போடவும்.  சீராக, மிளகாய்ப்பொடி போட்டு ஒரு கொத்தி வந்ததும் இறக்கவும்.சேர்ந்தார்போல இருக்கும்படி திக்னஸ் இருக்கட்டும்.சீரக சட்னி தயார்.

பயன்கள் 
 சத்தானது.சப்பாத்தி ,இட்லி,தோசை ,பொங்கலுக்கும் ஏற்றது.




                      
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url