Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பரவும் காதல் விவகாரம்,'அப்செட்' ஆன நயன்தாரா






நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன், நாயகியாக நயன்தாரா நெருக்கமாக நின்று கொண்டு இருந்த புகைப்படங்கள், அவர்களுக்கிடையே இருந்த காதலை உறுதிப்படுத்துவதாகவே இருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதற்கடுத்த சில நாட்களில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அணைத்தபடி இருக்கும் மற்றொரு புகைப்படம் வெளியாகி மீண்டும் அவர்களது காதல் விவகாரம் செய்திகளில் அதிகமாக அடிபட ஆரம்பித்தது.  

முதன் முதலில் அவர்களிருவருக்கும் இடையே காதல் என்ற செய்தி வந்த போது உடனடியாக மறுப்பு தெரிவித்தவர்கள் கடந்த வாரம் அந்த செய்தி மீண்டும் வெளியான போது எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. விரைவில் அவர்களிருவரும் தங்களது காதலைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்க உள்ளதாகவே கோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள். ஆனாலும், நயன்தாரா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் அதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள் என விஷயமறிந்த சிலர் தெரிவிக்கிறார்கள்.  

இதனிடையே, கடந்த வாரம் வெளியான புகைப்படத்தினால் நயன்தாரா மிகவும் டென்ஷனாகி விட்டாராம். அந்தப் புகைப்படம் அவருடைய வாட்ஸ்-அப் புரொஃபைல் புகைப்படமாம். அவரும், விக்னேஷும் அணைத்தபடி இருக்கும் அந்தப் புகைப்படத்தைத்தான் யாரோ சமூக வலைத்தளங்களில் பரவ வைத்துவிட்டார்கள். அந்த புகைப்படம் வெளியான அன்று நயன்தாரா திருநாள் படப்பிடிப்பில் இருந்தாராம். அன்றைக்கு மிகவும் டென்ஷனாக இருந்த நயன்தாரா, படப்பிடிப்பையும் கேன்சல் செய்து விட்டு, நாள் முழுவதும் ரூமை விட்டு வெளியே வராமலே இருந்தாராம்.
 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad