சூப்பர்ஸ்டாரின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியா !!





             

         நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்க இருக்கிறது.இப்படத்தின் டைரக்டர் நம்ம 'அட்டக்கத்தி' படத்தை இயக்கிய பா.ரஞ்சித். இவர் 2006-ல் தகப்பன்சாமி படத்தை இயக்கிய சிவசண்முகத்திடம் assistant director -ஆக முதலில் பணி  புரிந்தார்.அதுமட்டுமில்லாமல்  இவர்   டைரக்டர் லிங்குசாமி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரிடம் Film Maker-ஆக பணிபுரிந்தார் .


              இவர் 2012-ல் அட்டைக்கத்தி படத்தின் மூலமாக தனது இயக்குனர் பணியை தொடங்கினார்.ரோமேன்டிக் ஆன  ஒரு காமெடி படத்தின் மூலம் அறிமுகமானவர்,அடுத்து கார்த்தியை வைத்து 2014-ல் மெட்ராஸ் படத்தை இயக்கினார்.இப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார்.
           
     அடுத்து இவர் சூப்பர்ஸ்டார் -ஐ வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.இப்படத்தின் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு.இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை .படத்தின் இசை சந்தோஷ் நாராயணன்.இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.சூப்பர்ஸ்டாருடன் முதன் முதலாக பா.ரஞ்சித் சேர்ந்து இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url