இரத்தத்தை சுத்தப்படுத்தும் இஞ்சி,புதினா மற்றும் கொத்துமல்லி க்ரேவி
கோப்தா கிரேவி
(இஞ்சி,புதினா,கொத்துமல்லி)
தேவையான பொருள்கள்
- புதினா, கொத்துமல்லி இலை --- 2 கைப்பிடி
- இஞ்சி, பச்சைமிளகாய் --- 1 துண்டு
- கடலைமாவு + கார்ன்ப்ளவர் --- 4 ஸ்பூன்
- தக்காளி --- 3
- வெங்காயம் --- 2
- சீரகம் --- 1 ஸ்பூன்
- எண்ணெய் --- தேவையானது
- உப்பு --- தேவையானது
- மஞ்சள்தூள் --- 1 சிட்டிகை
- மிளகாய்த்தூள் --- 1/4 டீ ஸ்பூன்
செய்முறை
- இஞ்சி, பச்சைமிளகாய், புதினா, கொத்துமல்லி அரைத்து கடலைமாவில் உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு பிசைந்து கலந்து உருண்டைகள் செய்யவும்.
- சூடான எண்ணெயில், உருண்டைகளை கார்ன்ப்ளவர் மாவு கரைத்ததில் போட்டு எடுத்து எண்ணெயில் போடவும். வெந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவும்.தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய்விட்டு, சீரகம் தாளிக்கவும். வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சேர்ந்தார்போல வந்ததும் கோப்தாக்களைப் போட்டு 1 நிமிடம் கொதிக்க விடவும். கோப்தா கிரேவி தயார்.
பயன்கள்
சப்பாத்தி, பூரி, சாப்பாடு தொட்டு சாப்பிட சத்தானது.