ஆரோக்கியம் தரும் துளசி சப்பாத்தி
தேவையான பொருள்கள்
- கோதுமை மாவு --- 2 கப்
- பால் --- 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு --- தேவையானது
- எண்ணெய் --- தேவையானது
- துளசி சாறு --- தேவையானது
செய்முறை
- கோதுமை மாவுடன் துளசிசாறு, பால், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பிசைவது போல் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி செய்யவும்.
- சப்பாத்திகளை சூடான தவாவில் போட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு எண்ணெய் (அ ) நெய் தடவவும். விருப்பபட்டால் எண்ணெய் தடவலாம் .
- துளசி சப்பாத்தி ரெடி.