குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், குழந்தைக்கும் ஏற்ற அருமருந்து
பூண்டு லேகியம்
தேவையான பொருள்கள்
- உரித்த பூண்டு --- 1 சிறு கப்
- பால் --- 1 கப்
- கற்கண்டு --- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
உரித்த பூண்டை நன்றாக பாலில் வேக வைத்து, மசித்து கெட்டியாகும் வரை கிளறவும். கற்கண்டு சேர்த்து கிளறி இறுகியபின் இறக்கவும்.
பயன்கள்
இந்த பூண்டு லேகியத்தை தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக ஊரும். இதை சாப்பிடுவதால் குழந்தைக்கும் வயிற்றில் மந்தம், உப்புசம் ஏற்படாது.