புவியிலுள்ள நிலப்பரப்பில் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறதா?
நிலப்பரப்புகள்(கண்டங்கள்) மற்றும் பெருங்கடல்கள் புவியின் மேற்பரப்பில் நிலையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நில நகர்வானது வருடத்திற்கு 2-20செ.மீ.(0.75-7.75inch) நகர்ந்து கொண்டு இருக்கிறது.200 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக ,கண்டங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய நிலப்பரப்பைப் பெற்றிருந்தது.ஆனால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு,நிலப்பரப்பு தனித்தனியாக பிரிந்து கண்டங்கள் உருவானது.
அதில் புவியின் தெற்கு அரைக் கோளமானது 11%-க்கும் அதிகமாக நீர்ப்பரப்பைக் கொண்டுள்ளது.வடக்கு அரைக்கோளத்தில் 65%-க்கும் அதிகமாக நிலப்பரப்பு காணப்படுகிறது.கண்டங்களிலுள்ள நிலப்பரப்புப் பகுதியின் தடிமனானது அதிகபட்சமாக 70கி.மீ வரை உள்ளது.அண்டார்டிக்காவில் 99% நிரந்தர பணிப்படலமாக உள்ளது.ஆனால் தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்படலம் உருகிக் கொண்டே வருகிறது.
நம்பினால் நம்புங்கள் : புவியின் ஆழமான பகுதி மிகவும் வெப்பமயமானது.ஆனால் தெற்கு ஆப்பிரிக்காவில் மிக ஆழமான இடத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் செயற்கையான முறையில் குளிர்விக்கச் செய்து,அங்கு சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.