இந்தோனேசியா பாட்மிட்டன்-ல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சாய்னா நெவாலும் ,கிதாம்பி ஸ்ரீகாந்தும்
உலகின் நம்பர் 1 வீராங்கனை சாய்னா நேவால் 2009,2010 மற்றும் 2012 களில் வெற்றி வாகை சூடியவர்.இப்பொழுது பெண்களுக்கான தனி நபர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் .சாய்னாவும், ஆண்களுக்கான தனி நபர் தர வரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள கிதாம்பி ஸ்ரீகாந்த்-ம் $800,000-க்கான இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன்-ல் பங்கேற்க உள்ளனர் .ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்-ல் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு ,சாய்னா இந்த தொடரில் எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, இரண்டு முறை உலக சாம்பியன் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ,காமன்வெல்த் சாம்பியன் பருபள்ளி காஷ்யப் ,2011 வேர்ல்ட் சம்பியன்ஸ் ஜுவாலா கட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோரும் இந்த போட்டியில் பங்கு பெறுகின்றனர்.
மகளிருக்கான ஒற்றையர் ஆட்டத்தில்,லண்டன் ஒலிம்பிக்-ல் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால் தாய்லாந்தின் நிக்காவோன் ஜிண்டோப்பன் -ஐ சந்திக்கிறார்.சிந்து தனது முதல் சுற்றில் சு யா-சின்க்-ஐ சந்திக்கிறார்.
ஆடவருக்கான முதல் சுற்றில் கஷ்யப் தாய்லாந்தின் தனோன்சக் -ஐ எதிர்கொள்கிறார். ஸ்ரீகாந்த் டென்மார்க்-ன் ஹன்ஸ் கிறிஸ்டியன் விடிங்கஸ்-ஐ எதிர் கொள்கிறார் .
By Kathiresan