கற்றாழையின் பயனுள்ள மருத்துவ நன்மைகள்
கற்றாழை (குமாரி)
(Aloe Vera)
தன்மை
கற்றாழை 60 முதல் 100 செ.மீ வரை வளரக்கூடியது. நம் உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படுகிறது. கசப்பு,துவர்ப்பு,கார்ப்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்டது. இதிலுள்ள பசைத்தன்மை(Mucilage) போன்ற பகுதியில் மருத்துவ குணம் நிரம்பி இருக்கிறது. உடலை செழிப்பாகவும், வலிமையையும், ஆண்மையையும் வளர்க்கக் கூடியது.உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது. மலத்தை வெளித்தள்ளக்கூடியது. குடற்புண்களை ஆற்றக்கூடியது.
தீர்க்கும் நோய்கள்
இது தோல்களில் ஏற்படும் (Allergy) ஒவ்வாமை,தோல் நோய்கள் மற்றும் எந்த வகையான தீப்புண்களையும் வேகமாக ஆற்றும் தன்மை உண்டு. சருமத்தை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைக்க உதவும்.
வாதக் கோளாறுகளைப் போக்கும்.நஞ்சு நீங்கும். குன்மம் குணமாகும். மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய்கள் குணமாகும்.விரைவீக்கம்,கபம் மற்றும் காய்ச்சல் குணமாகும். நரம்புகளில் ஏற்படும் சுருக்கம், வீக்கத்தை குணமாக்கும்.பித்தத்தை தணிக்கும்.இரத்த தோஷம் குணமாகும்.
இரத்த நாளங்களில்(Blood Vessels) ஆக்சிஜன் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். கற்றாழையில் உள்ள சிலிக்கான், இதயத்தில் ஏற்படும் மாரடைப்பை தடுத்து, இரத்த நாளங்களை பலப்படுத்தும்.