ரசிகர்களின் சண்டை, கண்டுகொள்ளாத அஜித், விஜய் . சமரசம் பேசும் சிம்பு





                                                        விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை விஜய் பிறந்த நாளையும் விட்டு வைக்கவில்லை. விஜய் பிறந்த நாளான நேற்று  விஜய் பற்றி தப்பான ஹாஸ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் அஜித் ரசிகர்கள். இதனால் இரண்டு ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் போர் தொடங்க அதை நிறுத்துமாறு  சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                                                       விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள் #HBDDearVIJAY என்ற ஹாஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் #VijayTheCurseOfCinema என்று ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். அந்த ஹாஸ்டேக்கில் விஜய் பற்றி காமெடி, கிண்டல்கள். மீம்ஸ்கள் மற்றும் தவறான வார்த்தைகளால் புண்படுத்தும் விதமான புகைப்படங்களை ட்விட் செய்துவந்தனர். இதனால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதனால் அவர்களும் அஜித் சார்ந்த காமெடி மீம்ஸ்களை ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

                                                         இதனால் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் - அஜித் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் ட்விட்டரில் ட்விட்டியதாவது,  “ நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், உண்மையான தல ரசிகர்கள் என்றால் தவறான ஹாஸ்டேக்கை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இதை செய்வது நம்முடைய நோக்கமில்லை, அதுபோல விஜய் அண்ணா ரசிகர்களையும் தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் விதமாக எதுவும் செய்யவேண்டாம். உண்மையான ரசிகனா இதைத்தான் உங்க நட்சத்திரத்திற்கு திரும்பி செய்வீர்களா!” என்று இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



                                                        சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமலில் தோன்றி இன்று விஜய் - அஜித் என்று ரசிகர்களிடையே சண்டைகள் இன்றும் குறையவில்லை. முன்னரெல்லாம் ஒரே நாளில் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படம் வெளியானால் திரையரங்குகளில் ஆரம்பமாகும் இந்த சண்டை சச்சரவு தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச்செயல்பாடு தவறான முன்னுதாரணமாகவே இருக்கிறது. விஜய் - அஜித் போன்று அனைத்து நட்சத்திரங்களும் நண்பர்களாகவே இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு ரசிகர்கள் தான் தேவையில்லாமல் சண்டையிட்டுவருகின்றனர் என்கிறார்கள் ட்விட்டர் பயனீட்டாளர்கள். எனவே சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பதே நம்முடைய நோக்கமாகவும் இருக்கட்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]