இந்திய அணியின் பயிற்சியாளர்களாக டெண்டுல்கர் ,லட்சுமணன் மற்றும் கங்குலி நியமனமா ?
நமது இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய( BCCI) செயற்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் நடைபெற்றது.அதில் டீம் இந்தியா-வின் பயிற்சியாளர்களாக டெண்டுல்கர் ,கங்குலி மற்றும் டிராவிட்-ஐ நியமிப்பதற்கு பல புகழ்பெற்ற வீரர்களின் ஒப்புதலை பெற முடிவு எடுக்கப்பட்டது.
இந்த மூன்று பேரின் பங்களிப்பு தேசிய பயிற்சியாளர் அல்லது இயக்குனர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களிலும் ஆலோசனை பெறுவதற்கு பிசிசிஐ விருப்பப்பட்டதாம். இதில் கங்குலியும் டிராவிட்டும் ,டங்கன் ப்லெட்செர் -க்கு அடுத்த பயிற்சியாளர்களாக கருதப்பட்டார்கள். ஆனால் ட்ராவிட் அதற்கு 'நோ' சொல்லி விட்டார்.
இப்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளர்களாக டெண்டுல்கர்,லட்சுமணன் மற்றும் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .அதில் சச்சின் பேட்டிங் மற்றும் டெஸ்ட் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனிப்பார்.கங்குலி சர்வதேச ஒருநாள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை கவனிப்பார் .
லட்சுமணன் உள்ளூர் மற்றும் ஜூனியர் அளவில் ஆடும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பார்.
By Kathiresan