நீரிழிவு மற்றும் ஆண்களின் மலட்டுத் தன்மையை குணமாக்கும் ஆவாரை
ஆவாரை (ஆஹூல்யா )
(Cassia Auriculata)
தன்மை :
இதன் மலர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.ஆண்மைத் தன்மையை அதிகரித்து விந்துவின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.அதன் பயணத் தன்மையை ஊக்குவிக்கிறது .எலும்பு முறிவை இணைக்கும் தன்மை இந்த ஆவாரைக்கு உண்டு.
தீர்க்கும் நோய்கள் :
இது சர்க்கரை நோயை குணப்படுத்த வல்லது.நீரிழிவு நோயினால் ஏற்படும் பலவின்மையை போக்கும்.இரத்த பித்தத்தை குணப்படுத்தும்.இழுப்பு நோய் குணமாகும்.இரத்தப் போக்கை நிறுத்தக் கூடியது.ஆவாரை இலையை அரைத்து,மேல் பூச்சாக கட்டும் பொழுது எழும்பு முறிவு குணமாகும்.இதன் பூவை நீரில் இட்டு கொத்தி வைத்து குடித்தால் நீரிழிவு நாளடைவில் குணமாகும்.உணவு முறையை பின்பற்ற வேண்டும்.