இளமையாக இருப்பதற்கும், குழந்தைப்பேறுக்கு உதவும் இலந்தைப் பச்சடி






தேவையான பொருள்கள் 

  • இலந்தைப் பழம் ---  1 கப் 
  • துருவிய வெல்லம் ---  4 ஸ்பூன் 
  • மிளகாய்ப் பொடி ---   3 ஸ்பூன் 
  • உப்பு ---  தேவையானது 

செய்முறை 
  • இலந்தைப் பழத்தை போட்டு 1 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் கரண்டியால் மசித்துக் கொள்ளவும். விதையை நீக்கி விடவும்.

  • இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு பச்சடி பதம் வந்ததும் இறக்கவும்.

  • இலந்தைப் பச்சடி தயார்.

பயன்கள் 
 இளமையை இலந்தைப் பழம் தக்க வைக்கும். கருப்பையின் சக்தியைத் தூண்டி குழந்தைப்பேறுக்கு உதவும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url