"இந்த வாரம் 9 படங்கள் ரிலீசாகிறது"





                                                          நீண்ட வாரங்களுக்கு பிறகு, இந்த வாரம் வருகிற 26ந் தேதி 9 படங்கள் ரிலீசாகிறது. இதில் டெமானிக் என்ற ஒரு ஹாலிவுட் படம் தவிர மற்ற அனைத்தும் நேரடி தமிழ் படங்கள்.ஆதி, நிக்கி கல்ராணி, மிதுன் சக்ரவர்த்தி நடித்த யாகாவாராயினும் நாகாக்க, விமல், புன்னகை பூ கீதா நடித்த காவல், கருணாஸ் ஹீரோவாக நடித்த லொடுக்கு பாண்டி. மதுமிதா இயக்கிய மூணே மூணு வார்த்தை படங்கள் வெளிவருகிறது. இந்த படங்கள் அனைத்தும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படங்கள், இதில் ஆதியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் படமாக யாகாவராயினும் நாகாக்க இருக்கும். தமிழ், தெலுங்கில் வெளிவருகிறது. ஆதியின் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கி இருக்கிறார். 

                                             

                                            திரையுலகில் அனைவரும் அறிந்த தயாரிப்பு நிர்வாகி வி.ஆர்.நாகேந்திரன் இயக்கி உள்ள படம் காவல். நல்லா வருவடா நீ என்ற பெயரில் ஆரம்பித்து காவல் என்ற பெயரில் வெளிவருகிறது. தயாரிப்பாளர் புன்னகை பூ கீதாதான் ஹீரோயின். வல்லமை தாராயா, கொலை கொலையா முந்திரிக்க படங்களை இயக்கிய மதுமிதாவுக்கு மூனேணு மூணு வார்த்தை முக்கியமான படம். இதுவும் தமிழ், தெலுங்கில் வெளிவருகிறது. இது தவிர ஒரு தோழன் ஒரு தோழி, பரஞ்ஜோதி, மீனாட்சி காதலன் இளங்கோவன் என்கிற சிறு பட்ஜெட் படங்களும் வெளிவருகிறது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]