9 விருதுகளை வெல்லுமா வேலையில்லா பட்டதாரி?





                                                                   சென்ற வருடத்தின் பிளாக்பஸ்டர் படமான தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை அள்ளித்தந்த படம். அதோடு ஒரு சில விருதுகளையும் வென்று அசத்தியது. இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே அதிரி புதிரி வெற்றியைச் சுவைத்தார் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ். தற்போது ‘விஐபி’க்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்த வருடம் நடைபெறவுள்ள SIIMA விருது விழாவில் 9 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருக்கிறது ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம். இதில் எத்தனை விருதுகளை வெல்லும் என தனுஷ் ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

பரிந்துரைப் பட்டியல் :

1. சிறந்த நடன இயக்குனர் - பாபா பாஸ்கர்
2. சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா பொன்வண்ணன்
3. சிறந்த பாடலாசிரியர் - தனுஷ் (அம்மா... அம்மா...)
4. சிறந்த பின்னணிப் பாடகர் - தனுஷ் (அம்மா... அம்மா...)
5. சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக்
6. சிறந்த அறிமுக இயக்குனர் - ஆர்.வேல்ராஜ்
7. சிறந்த நடிகை - அமலாபால்
8. சிறந்த நடிகர் - தனுஷ்
9. சிறந்த படம் - வேலையில்லா பட்டதாரி




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url