மூன்றுமுகம்* விஜயின் 59வது படத்தின் பெயரா ?




                                                    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு ஜூலை ஒன்றாம்தேதி முதல் தொடங்கவிருக்கிறது. தொடக்கத்தில் ஒரு பாடலைத்தான் படமாக்கவிருக்கிறார்களாம். ராஜாராணி படத்தைத் தொடங்கும்போதும் முதலில் பாடலைத்தான் படமாக எடுத்தாராம் அட்லி. அந்த சென்டிமென்ட் காரணமாகவே இந்தப்படத்திலும் முதலில் பாடலைப் படமாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

                                                   படத்தொடக்கவிழாவன்று இயக்குநர் அட்லியிடம் படத்தின் பெயர் பற்றிக் கேட்டபோது, இன்னும் பெயர் வைக்கவில்லை, வைத்தால் சொல்லமாட்டோமா? என்று கேட்டார். படத்துக்காக அவர்கள் தேர்வு செய்திருக்கும் பெயர் மூன்றுமுகம் என்று சொல்லப்படுகிறது.

                                                  ரஜினி நடித்த இந்தப்படத்தின் உரிமையை தற்போது வைத்திருக்கும் தயாரிப்பாளரிடம் அந்தப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை வாங்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கினறனவாம். இந்தப்படத்தில் விஜய், மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்ராம். அதனால் பல பெயர்களைப் பரிசீலித்து, இந்தப்பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தப்பெயரைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]