வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பினால் ரூ.44 லட்சம் அபராதம்: துபாயில் புதிய சட்டம்
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப் பெரும் பங்கு வகித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அளிக்கப்படும் இலவச வைஃபை வசதியை பயன்படுத்தி மற்றவர்களை திட்டுவதும், அந்நாட்டைப் பற்றி மோசமான செய்திகளை பகிர்ந்து கொள்வதுமான தவறான செயல்கள் அதிகரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்த துபாயில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தின்படி வாட்ஸ் அப் மூலமாக யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திரிஹம் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 லட்சம்) அபராதம் விதிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.