ஏழுநாள் படப்பிடிப்புக்காக 40நாட்கள் செட் - விஜய்யின் புதியபடத்தகவல்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு ஜூன்26 முதல் தொடங்கவிருக்கிறதாம். சீனாவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அங்குள்ள தட்பவெப்பநிலை இப்போது சாதகமாக இல்லையாம். படப்பிடிப்புக்காகப் பார்த்துவைத்திருக்கும் இடங்கள் இப்போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கின்றனவாம்.
செப்டம்பரில்தான் இடங்கள் அழகாக இருக்கும் என்றும் அப்போது அங்கே போய் படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதனால், சென்னையில் முதல்கட்டப்படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். தொடங்கி ஏழுநாட்கள் நடக்கவிருக்கும் அந்தப்படப்பிடிப்புக்காக நாற்பதுநாட்கள் வேலை செய்து செட் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
ஒன்றுக்கு இரண்டு இடங்களில் நடக்கும் இந்த செட் வேலைகள் இரவுபகலாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். படத்தில் இடம்பெறும் மிகமுக்கியமான காட்சிகளை இந்த செட்டில் படமாக்கவிருப்பதால் பெரும்பொருட்செலவு செய்து அந்த செட்டை அமைத்துக்கொண்டிருக்கிறார்களாம்.