ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்
படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரனுக்கு அடுத்தடுத்து ஏற்பட் சில பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. தற்போது வருகிற ஜூலை 3ந் தேதி படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
படத்தில் நடிப்பது என் வேலை. அதன் புரமோசனுக்காக உழைக்கவும் செய்வேன். ஆனால் படத்தை வெளியிடுவது என் கையில் இல்லை. அதை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்கிறார் ஜெயம்ரவி.படம் தாமதமானதில் ஒரு படைப்பாளியாக நான் நிறைய வேதனை அடைந்தேன். அதே நேரத்தில் தயாரிப்பாளரின் சூழ்நிலையையும் நினைத்துப் பார்க்கிறேன். பூலோகம் எப்போது வெளிவந்தாலும் அது புதிதாகத்தான் இருக்கும். காரணம் அது பீரியட் பிலிம்" என்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.