அரண்மனை-2’ துவங்கியது






                                                             சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘அரண்மனை’. இப்படம் ஹிட்டானதால் இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி விரைவில் எடுக்க இருக்கிறார் . கடந்த சில நாட்களாக இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வந்தார் சுந்தர்.சி. அதனை தொடர்ந்து நேற்று  ‘அரண்மனை-2’ படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் சுந்தர்.சி. முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா இப்படத்திலும் முக்கிய வேடமேற்று நடிக்க இவருடன் த்ரிஷா, சித்தார்த், சூரி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.

                                                                  சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்திற்கு இசை அமைத்த ‘ஹிப் பாப்’ தமிழா ஆதி தான் சுந்தர்.சி.யின் ‘அரண்மனை- 2’ படத்திற்கும் இசை அமைப்பாளர்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url