12 லட்சம் பேர் பார்த்த என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா




                                                        திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில், சிவகார்த்திகேயன்  - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரஜினி முருகன் படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கும் இரண்டாவது படமான ரஜினி முருகன் படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டி. இமான் இசையமைத்துள்ள ரஜினி முருகன் படத்தின் பாடல்களில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற பாடல் சிங்கிள் ட்ராக்காக முதலில் வெளியானது. சிங்கப்பூரில் சிங்கிள் ட்ராக் வெளியான உடனேயே வைரலாக பரவ ஆரம்பித்ததுமே 29 அன்று இப்பாடலின் மேக்கிங் வீடியோ உடன் இணைந்து பல நட்சத்திரங்கள் தோன்றிய டப்ஸ்மாஸ் வீடியோவும் இணைக்கப்பட்டு ஒரு வீடியோவை யுட்யூபில் பதிவேற்றம் செய்தனர்.

                                                       ஏறக்குறைய மூன்று வாரத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை 12 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இதற்காக ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் பொன்ராமுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இமான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு ஊதா கலரு ரிப்பன் பாடல் அமைந்ததைப் போல், ரஜினி முருகன் படத்துக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]