'டுவிட்டர்' தனிப்பட்ட தகவலுக்கான எழுத்துக்கள் 10 ஆயிரமாக அதிகரிப்பு





                                                                           'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில், தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான எழுத்துக்களை, 140லிருந்து, 10 ஆயிரமாக அதிகரிக்க, அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள் தற்போது பெரிதும் உதவுகின்றன. 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில், நம்முடைய தகவல்களை தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமானால், அதிகபட்சமாக, அதில், 140 எழுத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்றவற்றில் இதற்கு கட்டுப்பாடு இல்லை. எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போட்டியை சமாளிக்கும் வகையில், டுவிட்டர் நிறுவனமும் தற்போது அதிரடி மாற்றத்தை அடுத்த சில மாதங்களில் அமல்படுத்தவுள்ளது. இதன்படி, தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள, 10 ஆயிரம் எழுத்துக்களை பதிவு செய்ய முடியும். தனிப்பட்ட தகவல் என்பது, குறிப்பிட்ட ஒருவரால் அனுப்பப்படும் செய்தியை, அவர் யாருக்கு அனுப்புகிறாரோ அவர் மட்டுமே படிக்க முடியும். மற்றபடி, 'பொதுவாகவும், வெளிப்படையாகவும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில், ஒரு டுவிட்டுக்கு, 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு தொடரும்' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url