Sesbania Grandiflora (அகத்தி)
Sesbania Grandiflora (அகத்தி)
மிக உயர்ந்த செடியாக வளரக்கூடியது. நீண்ட காம்பும் இருபக்கங்களிலும் வரிசையாகப் புலிய இலையைப்போல் ஆனால் அதைவிடப் பெரிய அளவில் சற்று நீண்டு தடித்த இலைகளைக் கொண்டிருக்கும். மலர் வெண்ணிறம் கொண்டு வளைந்து காணப்படும். காய் நீண்டிருக்கும். விதைகள் சிறியவையாக இருக்கும்.
தன்மை
அகத்தி குளுமைத் தன்மையுடையது. இதன்மலரும் குளுமைத் தன்மையுடையது. இலை கார்ப்பு கசப்பு இனிப்புச் சுவையும் கொண்டது. குருதன்மையுடையது. சற்று உஷ்ணத்தை வளர்க்ககூடியது. இதன் காய் மலத்தைப்போக்கும். அறிவை வளர்க்கும். சுவையூட்டும். இலேசானது - பக்குவமடையும்போது இனிப்புச்சுவை கொள்ளும் .
தீர்க்கும் நோய்கள்
மூன்று தோஷங்கள் மயக்கம் கபம் இருமல் நிறவேறுபாடு பிசாசுகளால் தோன்றும் துன்பம் என்பனவற்றைப் போக்கும். இதன் மலர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தோன்றும் முறைக்காய்ச்சல் இரவில் பார்வையின்மை பீனசம் கபம் பித்தம் வாதம் என்பனவற்றைப் போக்கும்.
இதன் இலைகள் கிருமிநோய் கபம் அரிப்பு இரத்தப்பித்தம் என்பனவற்றைப் போக்கும்.
இதன் காய்கள் மூன்று தோஷங்கள் வலி கபம் சோகை நஞ்சு சூன்மம்
என்பனவற்றைப் போக்கும்.