Glycyrhiza Glabra [அதிமதுரம் ] cure; பித்தம், வாதம், இரத்தஷம், வீரணம், வீக்கம், விஷம், வாந்தி நீர்வேட்கை சோர்வு , ஈளைகாசநோய்
Glycyrhiza Glabra [அதிமதுரம் ]
தன்மை
சீதவீரியமுள்ளது. சுவையாக இருப்பது. எண்ணெய்ப் பசையும் பளுத்தன்மையும் கொண்டது. கண்களுக்கு இதமானது. வலிமை நல்ல உடல் நிறம் தரவல்லது. விந்துவை வளர்க்கும். தலை முடியையும் வளர்க்கும். இனிய குரலைத் தோற்றுவிக்கும்.
விளை நிலம்
அரேபியா போன்ற மனற்பாங்கான இடங்களிலும் பஞ்சாப் ஸிந்து பிரதேசங்களிலும் மிகுதியாக விளைகிறது.
தீர்க்கும் நோய்கள்
பித்தம், வாதம், இரத்தஷம், வீரணம், வீக்கம், விஷம், வாந்தி நீர்வேட்கை சோர்வு , ஈளைகாசநோய் முதலியவற்றைப் போக்கவல்லதாகும்.