பேஸ்புக் மூலம் அதிகரிக்கும் பொறாமை
இன்று அனைவர் மத்தியிலும் நிலவும் 'பேஸ்புக்' பித்து பற்றி தனியாகக்
கூற வேண்டியதில்லை. முன்பின் முகம் தெரியாதவர்களையும்
நண்பர்களாக்குவதற்கு சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' சிறந்த அமைப்பாக
உள்ளது.
இப்படி, 'பேஸ்புக்' நட்பு வட்டாரத்தை வளர்க்க உதவுவதாகக்
கருதப்பட்டாலும், ஒருவர் மீது மற்றொருவர் பொறமைப்படுவதற்கு
காரணமாக 'பேஸ்புக்' அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கைத் தகவலை
வெளியிட்டுள்ளனர்.
அதாவது, முன்னர் ஒவ்வொரு பயனாளரும் ஏதாவது ஒரு தகவலை
போஸ்ட் செய்வதில் ஆர்வம் காட்டியபோதிலும் தற்போது அது
குறைவடைந்து தாம் போஸ்ட் போடுவதை நிறுத்தி மற்றவர்களுடைய
பேஸ்புக் புரொபைலை பார்வையிடுவதில் ஆர்வம் கட்டுகின்றனர். அப்போது
மற்றவர்களின் போஸ்ட்கள், அவற்றுக்கு அதிகரிக்கும் ' லைக் ' ஆகியவற்றைப்
பார்த்து ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்கின்றனர் என ஆய்வில்
குறிபிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக தாமாக முன்வந்த 80 பேர் பயன்படுதப்பட்டுள்ளனர்.