டண்டணக்கா'வுக்கு டி.ஆர். பச்சைக்கொடி: 'ரோமியோ ஜூலியட்' படக்குழு மகிழ்ச்சி

டண்டணக்கா'வுக்கு டி.ஆர். பச்சைக்கொடி: 'ரோமியோ ஜூலியட்' படக்குழு மகிழ்ச்சி





ரோமியோ ஜூலியட்' படத்தைப் பார்த்துவிட்டு டி.ஆர் சந்தோஷமாக பாராட்டி பேசி இருப்பதால், 'டண்டணக்கா' விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லஷ்மன் இயக்கி இருக்கிறார். ஜூன் 12ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டண்டணக்கா' பாடல் சர்ச்சையில் சிக்கியது. இப்பாடலில் டி. ராஜேந்தரின் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் பாடல் வைரல் ஹிட்டாக, இந்தப் பாடலை வைத்து டி.ராஜேந்தரை கலாய்த்து சில நெட்டிசன்கள் வீடியோக்களை பதிவேற்றினர்.

டி.ராஜேந்தரும் இப்பாடல் விவகாரம் தொடர்பாக 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கும் முனைப்போடு, டி.ஆருக்கு 'ரோமியோ ஜூலியட்' படத்தை திரையிட்டு காட்டினார்கள். முழுப்படத்தையும் பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் சந்தோஷமடைந்து படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதனால் 'ரோமியோ ஜூலியட்' படக்குழு மிகவும் சந்தோஷமடைந்து இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் டி.ஆர் தாக்கல் செய்திருக்கும் மனு விசாரணைக்கு வரும் அன்று, அவ்வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து தடங்கல்களையும் தாண்டி ஜூன் 12ம் தேதி 'ரோமியோ ஜூலியட்' திரைக்கு வரவிருக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url