இரத்த அழுத்தம் ,ஆஸ்துமா ,இதய நோய் ,மார்பகப் புற்றுநோய் ,எலும்பின் அடர்வுத் தன்மை ,ஆண்மைத் தன்மை ,கண் நோய் மற்றும் ஈரலை பாதுகாக்கும் அத்தி
அத்தி (உதும்பர)
(Ficus Racemosa)
தன்மை : இது குளிர்ச்சித் தன்மை கொண்டது .மத்திய கிழக்கில் முதன் முதலாகப் பயிரிடப்பட்ட உணவாகும். வறட்சித் தன்மையுடன் உள்ள பழங்களில் சத்துக்கள் அதிகம் .இனிப்புச் சுவை கொண்டது .சிகப்பு,பச்சை மற்றும் ஊதா நிற பழங்களை கொண்டது இந்த அத்தி .
தீர்க்கும் நோய்கள் : இரத்த தோஷம் குணமாகும். இதில் உள்ள பொட்டசியம் மற்றும் மினெரல்ஸ் உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்தை சீராக்கக்கூடியது .இதில் கால்சியம் நிறைந்து இருப்பதால் எலும்புகளுக்கு பலம் கொடுக்கிறது.சிறுநீரின் வழியாக கால்சியம் வெளியேறுவதைத் தடுத்து ,இரத்த ஓட்டத்திற்கு துணை புரிகிறது .கரையாத நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் மலத்தை இலகுவாக வெளித்தள்ளக்கூடியது .செரிமானத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது .
நம் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலமான ட்ரைக்ளிசரைசடு-ஐ இலைகளின் மூலமாக அதிகப்படுத்தி நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.இதில் உள்ள கரையும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கின்றது.கரையாத நார்ச்சத்து கோலோன் மற்றும் மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.குடலில் உள்ள திசுக்களை பலப்படுத்துகிறது.
இரண்டு (அ )மூன்று பழங்களை பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை அதிகரிக்கும் .உடல் பலப்படும்.நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உலர் அத்தி பயன்படுகிறது .தசைச் சிதைவு காரணமாக ஏற்படும் கண் நோய்களில் இருந்து இது பாதுகாத்து பார்வையை தெளிவுபடுத்துகிறது.கர்ப்ப காலத்தில் ஏற்படும் புற்று (குறிப்பாக மார்பக புற்றுநோய் )ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் .
கக்குவான் இருமல் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளை இந்த அத்திப்பழம் கட்டுப்படுத்துகிறது.பித்த,கப சமனியாகப் பயன்படுகிறது. வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக்கூடியது.
உள் உறுப்புகள் அனைத்திற்கும் பயன்படுத்தக்கூடியது.
ஈரலை பாதுகாக்கக்கூடியது.