ஆஸ்திரேலிய ஓபன் சாய்னா நெவால் தோல்வி










ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில்

உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இந்தியாவின் 

சாய்னா நெவால் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 

நேற்று நடைபெற்ற காலிறுதியில் சாய்னா 15-21, 13-21 என்ற நேர் செட்களில் 

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த சீனாவின் ஷிக்ஸியான் 

வாங்கிடம் தோல்வி கண்டார்.

முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ஷிக்ஸியான் வாங் 42 

நிமிடங்களில் சாய்னாவை சாய்த்தார். இவர்கள் இருவரும் இதுவரை 12 

ஆட்டங்களில் விளையாடி தலா 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் சர்வதேச தரவரிசையில் 6-வது 

இடத்தில் இருக்கும் ஷிக்ஸியான் வாங், சர்வதேச தரவரிசையில் 12-வது

இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் பே இயோனை சந்திக்கிறார்

இயோன் 

தனது காலிறுதியில் 21-8, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் கனடாவின் 

மிச்செல் லீயை தோற்கடித்தார்.


சாய்னா தோற்றதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் ஆட்டம் 

முடிவுக்கு வந்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url