இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நிலக்கடலை











              உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்னைகள், கேன்சர் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள், குழந்தை பேறு இன்மை பிரச்னை இருக்காது. இதில் உள்ள மாங்கனீஸ், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை உண்பது நல்லது. நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம். தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை

பாதுகாக்கிறது. இதயநோயை தடுக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடெண்டாகவும் உள்ளது. ஸ்ட்ரோக் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.பபிப்டோபான் என்ற அமினோஅமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மன அழுத்ததை போக்குகிறது. நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும். பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டா சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் 1, 12, நியாசின், புரதம், நார்ச்சத்து உள்ளிட்டவை இதில் ஏராளம் உள் ளன.பாலூட்டும் பெண்களுக்கு சிறந்த உணவாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url