பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர்.
இவர்களில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள். 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேர் மாணவிகள். தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் தேர்வு எழுதினர்.
அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
அரசு தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் தமிழை முதல்பாடமாக எடுத்து படித்த சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
இந்த தேர்வில் மாணவர்கள் 90.5 சதவிகிதமும், மாணவிகள் 95.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.9 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் சாதனை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா, பெரம்பலூர், காரணை, அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா, பட்டுக்கோட்டை அரசு பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர்.