சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா உருவெடுத்துள்ளார்,தெண்டுல்கர் பாராட்டு
சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா உருவெடுத்துள்ளார்; தெண்டுல்கர் பாராட்டு
தெண்டுல்கர் பேட்டி
8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பை அணியின் ஆலோசகராக இருந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்களை உற்சாகப்படுத்தினார். வெற்றி குறித்து அவர் ஐ.பி.எல். இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த சீசனில் எங்களுக்கு தொடக்கம் மோசமாக (தொடர்ந்து 4 தோல்வி) அமைந்தது. உண்மையிலேயே இது கடினமான ஒன்று. ஆனால் இவற்றை எங்களது திறனையும், போராட்டக்குணத்தையும் சோதிக்கக்கூடிய தருணங்களாகத் தான் பார்த்தோம். அதனால் ஒருங்கிணைந்து, மிக கடினமாக உழைத்தோம். இந்த வெற்றி தற்செயலாக கிடைத்தது அல்ல. கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. சரிவில் இருந்து மீள முடியும் என்று ஒவ்வொருவரும் ஆணித்தரமாக நம்பினோம். ஒரு தொடரை நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள் என்பது பெரிது அல்ல. எப்படி முடிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். தொடக்க ஆட்டக்காரர் லென்டில் சிமோன்சின் பேட்டிங் மிக நேர்த்தியாக இருந்தது. தொடர் முழுவதும் அவர் தொடர்ந்து ரன் குவித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாண்ட்யா
மும்பை அணிக்காக முதல் முறையாக விளையாடிய சில வீரர்களும் மிகச்சிறப்பாக ஆடினார்கள். சுஜித், ஹர்டிக் பாண்ட்யா போன்ற வீரர்கள் என்னை வெகுவாக கவர்ந்தனர்.
இதே போல் அனுபவ பவுலர் வினய்குமாரும் இந்த ஆண்டில் தான் மும்பை அணிக்காக முதல்முறையாக களம் இறங்கினார். அவரது பந்து வீச்சு தொடக்கத்தில் திருப்திகரமாக இல்லை. ஆனால் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்து, அணிக்கு கைகொடுத்தார்.
கேப்டன்ஷிப்பில் ரோகித்
மும்பை கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து கேட்கிறீர்கள். மும்பை அணியின் கேப்டன் பதவியை முதல்முறையாக ஏற்ற ரோகித் சர்மாவையும், இப்போதுள்ள ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டு பார்த்தால், கேப்டன் பதவியில் அவர் நல்ல முன்னேற்றம் கண்டு சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார் என்று தான் சொல்வேன். இப்போது அவர் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளார். கேப்டன்ஷிப் காலத்தில் ஏற்ற, இறக்கங்களையும், சவால்களையும் சந்தித்துள்ளார். இது போன்ற சவால்கள் தான் ஒருவரை சிறந்த கிரிக்கெட் வீரராகவும், கடினமான மனிதராகவும் உருவாக்கும்.
வியூகங்கள் வகுப்பது தொடர்பாக நடத்தப்படும் அணி வீரர்களின் ஆலோசனை கூட்டங்களில் நாங்கள் என்னென்ன திட்டங்களை கூறுகிறோமோ அதை களத்தில் ரோகித் சர்மா செம்மையாக செயல்படுத்தினார்.
பாண்டிங் குறித்து...
தலைமைப் பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்குடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கிறீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் அவருக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அப்போது அவர் ரொம்ப சீரியசாக, பயமில்லாத ஒரு வீரராக செயல்படுவதை பார்த்திருக்கிறோம். எந்த ஒரு தருணத்திலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழக்கமாட்டார். அதே பாண்டிங்காகத்தான் இங்கும் பளிச்சிட்டார். எந்த ஒரு சமயத்திலும், நாம் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு விடுவோம் என்று அவர் நினைத்ததில்லை. இது போன்ற சூழலில் அனுபவத்துடன், நேர்மறை சிந்தனை கொண்டவர்கள் அணிக்கு தேவை. அப்படிப்பட்டவர் தான் ரிக்கிபாண்டிங்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக உருவெடுத்திருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக உருவெடுத்திருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.