மனிதக் கழிவுகளில் இருந்து தங்கம்

     






           மனிதக் கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா

என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

        அமெரிக்காவின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும்

கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு

நடத்தப்படுகிறது. பாறைகளில் இருக்கக் கூடிய அளவுக்கு அந்த  கழிவுகளில்

தங்கம் இருந்தால், அதிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது என்பதில் கவனம்

செலுத்துவது பலனைத்தரும் என்று அந்த  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

             கழிவுகளில் இருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம் அவை

சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை விடுவிப்பதை தடுக்க

முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

          தற்போது அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து

எடுக்கக்கூடிய தங்கத்தின் அளவு, பாறைகளில் மிகக் குறைந்த அளவில்

இருக்கும் தங்கத்துக்கு ஒப்பாகும் என்று இது தொடர்பான ஆய்வை

மேற்கொண்டுவரும் அமெரிக்க மண்ணியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த

டாக்டர் கேத்தலின் ஸ்மித் கூறுகிறார்.

        அந்தக் கழிவுகளில் தங்கத்தை தவிர வெள்ளி மற்றும் பலேடியேம்

வனேடியம் போன்ற அபூர்வ தாதுப்பொருட்களும் காணப்பட்டன என்று அவர்

மேலும் கூறுகிறார்.


            

      
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url