மரத்தில் செயல்படும் ஓட்டல்




மரத்தில்  செயல்படும்  ஓட்டல் 

          ஆஸ்திரெவியாவின்  புளூ  மவுண்டெயின்  பகுதிக்கு  சுற்றுலா  சென்றால்  நீங்கள்,  மரம்  மீது  ஏறி  அதில்  அமைந்துள்ள  சிறப்பு  ஓட்டலில்  இயற்கையை  ரசித்தபடியே  விருந்து  சுவைக்கலாம்.  4  தைல  மரங்கள்  தூண்  போன்ற  சதுர  வடிவில்  நின்ற  இடத்தை  தேர்வு  செய்து,  அவற்றை  இணைத்து  இந்த  விடுதியை  அமைத்திருக்கிறார்  லயோனல்  பக்கெட்  என்னும்  இளைஞர்.  இவர்  மரங்களில்  சுற்றுலாவாசிகளுக்கான  குடில்  அமைக்கும்  நிறுவனத்தை  நடத்தி  வருகிறார்.  நீண்ட  நாட்களாக  தேடி  அலைந்து   இந்த  மலையின்  பரந்த  அழகை  ஒரே  இடத்தில்  அமர்ந்தபடி  ரசிக்கும்  வகையில் இந்த  மர  ஓட்டலை  உருவாக்கியுள்ளேன்  என்கிறார்  அவர்.  பல்வேறு  வசதிகள்  கொண்ட  இது,  உலகின்  சிறந்த  மர  விடுதியாக  கருதப்படுகிறது.  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url