எலி படத்தில் வடிவேலு புது கெட்டப்

                                               

 எலி படத்தில் வடிவேலு புது கெட்டப்







வடிவேல் ‘எலி’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சதா நடிக்கிறார். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்.
1960களில் நடக்கும் கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. இதற்காக அந்த கால கட்டத்து ‘கெட்டப்’பில் வடிவேல் தோன்றுகிறார்.
இதற்காக உடை, முடியலங்காரத்தை மாற்றி உள்ளார். இதில் அவருக்கு துப்பறியும் போலீஸ் வேடம் என்பதால் நிறைய மாறுவேட கெட்டப்களும் உள்ளன. பெண் கேரக்டரிலும் வருகிறார்.
மேற்கண்ட தகவலை படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ‘‘முழு காமெடி படமாக எடுக்கிறோம். ஒருகொள்ளை கும்பலை பிடிக்க ரகசிய போலீசாக வடிவேல் செல்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களே கதை.
வடிவேல் ‘எலி’யின் உடல் மொழியை உள்வாங்கி அதன்படி நடிக்கிறார். நிறைய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். பஞ்ச் வசனங்களும் இருக்கும்‘‘ என்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url