தலைமுடி வளர்த்தல் ,வயிற்று உபாதைகள்,ஈரலை பலப்படுத்துதல் ,ஆமவாதம் மற்றும் செரிமானத் தன்மையை சரிசெய்யும் அவுரி இலை
அவுரி (நீலினி )
(Indigofera Tinctoria)
தன்மை : இது ஒரு தாவர வகையைச் சார்ந்தது. இதன் நீல நிறத் தன்மை தலை முடிக்கு இயற்கையான நிறத்தை தருகிறது . இதனுடன் மருதாணி இலையை சேர்த்தும் பயன்படுத்தலாம் .இது கைப்பு (கசப்பு,துவர்ப்பு ,கார்ப்பு )சுவையுடையது .தலைமுடியை வளர்க்கக்கூடியது .உள்ளுக்கு சாப்பிட பேதிக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது .
தீர்க்கும் நோய்கள் : பித்தத்தால் ஏற்படும் மயக்கம் ,தலைசுற்றல் நீங்கும்.வயற்றில் உள்ள உபாதைகளை வெளியற்றுகிறது .ஈரலை பலப்படுத்தக்கூடியது .குறிப்பாக மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குனமாக்கக்கூடியது .வாத நோய்களை நீக்கும் .இரத்தத்தில் உள்ள நோய்களைப் போக்கும் .கபம் குணமாகும் . ஆமவாதம்( முரண்பாடான உணவுப்பழக்கவழக்கம் ,செரிமானத் தன்மை குறைவு ,அளவுக்கு அதிகமான உணவு (அ ) நீர் அருந்துவது ,உணவு வகைகள் (கடினமான ,குளிர்ச்சியான,உலர்ந்த,சுத்தமில்லாத )இயற்கையாக இல்லாமை முதலியவை),செரிமானமில்லாமல் வாயுவானது மேல்நோக்கி செல்வது ,கொடிய நஞ்சு வெறி முதலிய நோய்களை குணமாக்கக்கூடியது .