வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு: டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் ஹர்பஜன்



இந்திய அணி அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கான அணியை தேர்வு செய்யும் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக கோலி தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம் பெறாமல் இருந்த ஹர்பஜன்சிங்குக்கு டெஸ்ட் அணியில் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.





அதே போல் ஒரு நாள் போட்டிக்கான அணியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக தவால் குல்கர்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணி விவரம் வருமாறு: கோலி(கேப்டன்), முரளி விஜய், தவான், கே.எல். ராகுல், புஜாரா, ரகானே, ரோகித், சாகா, அஷ்வின், ஹர்பஜன், கரன் சர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான அணி விவரம் வருமாறு: தோனி(கேப்டன்), ரோகித், ரகானே, தவான், கோலி, ரெய்னா, ராயுடு, அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி மற்றும் தவால் குல்கர்னி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url