பெருகும் சைபர் குற்றம், பேஸ்புக் நல்லதா:-
பெருகும் சைபர் குற்றம்:-
தொழில்நூட்ப உலகில் 'சைபர்' குற்றங்கள் மிகுதியாகிக் கொண்டே போகிறது. நிறுவன மேலாளர்கள், தொழில்அதிபர்கள் 649 பேரிடம், ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 82 சதவீதம் சைபர் கிரைம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறி உள்ளனர். ஐ.எஸ்.ஏ .சி.ஏ. மற்றும் ஆர்.எஸ்.ஏ. ஆகிய அமைப்புகள் இந்த கருத்துக் கணிப்பை நடத்தின.
பேஸ்புக் நல்லதா:-
சமூக வலைத்தளமான பேஸ்புக், மனவளத்தை மேம்படுத்துகிறதா ? இல்லை கவலைப்படுதுகிறதா ? என்பது பற்றி, இங்கிலாந்தில் உள்ள நியூ பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. 23 முதல் 68 வயதுடையவர்கள் 20 பேரை தேர்வு செய்து கொண்டனர். இவர்களில் மனநல சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் அடங்குவர். அவர்களிடம் பேஸ்புக் பயன்பாடு பற்றி கேட்டபோது, சரி பாதியினர் தங்கள் மனம்வளம் மேம்பட்டிருப்பதாகவும், சரி பாதியினர் தங்கள் ஆரோக்கியத்தை பேஸ்புக் கெடுத்துவிட்டதாகவும் கூறி உள்ளனர் . பேஸ்புக் கருத்துகளுக்கு கிடைக்கும் பாராட்டுகளும் 'நான் புகழ்பெற்றவன் ' எனும் நம்பிக்கையூட்டும் மனப்பாங்கை உருவாக்குவதாகவும், சில சமையங்களில் அது எதிர்மறையான விளைவை உருவாக்குவதும் ஆய்வில் தெளிவாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.