ஓசோன் படலம் காற்று மாசுபடுவதால் பாதிக்கப்டுகிறதா ?
ஆமாம், ஓசோன் வாயு படலம் போல பூமியை சூழ்ந்திருந்து. சூரியனில் இருந்து வரும் அபாயமான புறஊதாக் கதிர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதை அறிவீர்கள்.வளிமண்டலத்தின் மேல் அடுக்கான ஸ்டிரடோஸ்பியர் அடுக்கில் ஓசோன் படலம் காணப்படுகிறது. புறஊதாக் கதிர்கள் ஆக்ஸிஜன் மூலகூறை சிதைக்கும்போது அது இரு ஆக்ஸிஜன் அணுக்களாக பிரிக்கின்றன. பிறகு அந்த ஆக்ஸிஜன் அணுக்கள் மற்ற ஆக்ஸிஜன்மூலக் கூறுடன் மோதி இணையும்போது ஓசோன் வாயு உருவாகிறது.
வளிமண்டலத்தின் தாழ்ந்த அடுக்கான டிரபோஸ்பியர் அடுக்கில் இருந்தே ஓசோன் வாயு காணப்படுகிறது. நைட்டிரஜன் ஆக்சைடு மற்றும் ஹைட்ரோ கார்பன் பொருட்களால் ஓசோன் வாயு மிகவும் பாதிக்கப்படுகிறது. அது நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது. வாகன புகைகள், தொழிற்சாலை மாசுகள் இந்த மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.
ஓசோன் வாயு தாழ்வான பகுதியில் காணப்படுவது, மாசு மிகுதியாகிவிட்டதற்கான ஓர் அடையாளம். தாழ்வான பகுதியில் ஓசோன் வாயு அதிகரிப்பது பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை உருவாக்கும். நெஞ்சுவலி, இருமல், இரத்தம் கட்டுதல் போன்றவை அவற்றில் சில. தாவர வளர்ச்சி மற்றும் இதர உயிர்ச்சூழளுக்கும் ஓசோன் வாயு தீமை விளைவிக்கும்.
டெல்லி,பெங்களுரு, புனே, கொல்கத்தா, போன்ற நகரங்களில் ஓசோன் மாசு மிகுதியாக காணப்படுகிறது. இதனால் கோடையில் அதிகமான வெப்பம் வீசுகிறது. 2050-ம் ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான நகரங்களில் ஓசோன் பாதிப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கும்.மிகுதியான வெப்பம் வாட்டும். 'பூமி வெப்பமாதல்' பிரச்சினையால் உலகம் துயரங்களை சந்திக்கும்.