மைய நரம்பு மண்டலம் ,தாது பலம் ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அமுக்கராக்கிழங்கு
அமுக்கராக்கிழங்கு (அஸ்வகந்தா )
தன்மை : இது உடலுக்கு வலிமை தரக்கூடியது . மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . இக்கிழங்கில் துவர்ப்புத் தன்மையுடன் கசப்புத் தன்மையும் இருக்கும் .உஷ்ண வீரியம் கொண்டது .ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கி விந்துவை பலப்படுத்தக்கூடியது .அதன் பயணத் தன்மையை அதிகரிக்கும் . பாரம்பரிய இந்திய மற்றும் ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. அஸ்வகந்தா வேர்கள் வீக்கத்தை(வாதம்உட்பட)போக்கக்கூடியது . இதய மற்றும் மைய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது .அஸ்வகந்தா பற்றிய ஆராய்ச்சிகள் நோய் எதிர்ப்பு மண்டல செல்களை தூண்டக்கூடியது.இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்த் தொற்றை விரட்டும்.ஞாபகசக்தியை அதிகரிக்கும் .
தீர்க்கும் நோய்கள் : மனித உடலின் மூன்று முக்கிய சீதோஷ்ண நிலைகளில் வாதம், கபம் முதலியவற்றால் ஏற்படும் தொந்தரவுகள் குணமாகும். வெண்குட்டம் (லுகோடெர்மா ) எனும் தோல் நோய் நீங்கும் .வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மையை இது பெற்றிருக்கிறது. தாது பலத்தை அதிகப்படுத்தி உடலை வன்மை அடைய செய்கிறது.